சேட்டிலைட்ஸ் 2019

K-பாப் பார்ட்டி
ஃபிப்ரவரி 23

ஒரு இரவுக்கு மட்டும், ஆக்லாந்து டவுன் ஹாலைப் பொறுப்பேற்றுக்கொள்ளுமாறு நகரின் உற்சாகம் மிக்க அற்புதக் கலைஞர்களான K-பாப் நடன நட்சத்திரங்களை அழைத்து வருகிறோம்.


தேர்ந்தெடுத்து வழங்குபவர்: ரினா சே — இவர் பியான்ஸ் மற்றும் ஜஸ்டின் பீபருடன் சேர்ந்து நடனமாடியுள்ளார், AOA, காஸ்மிக் கேர்ள்ஸ், SF9, மான்ஸ்டா X ஆகியவற்றுக்கு நடன அமைப்பாளராக இருந்துள்ளார் — அனைத்து வயதினருக்குமான இந்த நடனப் பார்ட்டியில் சுழற்சி முறையில் மிகவும் பிரபலமான K-பாப், நாங்கள் நடத்து போட்டியின் இறுதிப் போட்டியாளர்களின் மேடை நிகழ்ச்சிகள் மற்றும் ரினா, ஸ்ட்ரீட் கான்டீ, ஜுவா, 603 பூகி ஸ்குவாட் ஆகியவர்களின் சிறப்புத் தோற்றங்கள் காட்டப்படும்.

உங்களது மிகச்சிறந்த நடன அசைவுகளுடன், மிகச்சிறந்த K-பாப் அங்கிகளை அணிந்து (இவற்றுக்குப் பரிசுகள் உள்ளன!), இந்த ஆண்டின் மிகப்பெரிய K-பாப் பார்ட்டிக்குத் தயாராகுங்கள்.

ஆக்லாந்து லைவ் மூலம் வழங்கப்படும்.

இடம்
Great Hall
Auckland Town Hall
301 – 317 Queen St
Auckland CBD
நாள்
23 ஃபிப்ரவரி சனிக்கிழமை
இரவு 8 – 10 மணி
டிக்கெட்
$10
Book Now

தி மூட் மெஷின்
மார்ச் 5 – 24

உங்களுக்கு அருகிலுள்ள பொது இடத்தில் திடீரென்று தோன்றும் இந்த விசித்திரமான இயந்திரம், உங்கள் மனநிலையை அவ்வாறே கவனித்து, கலைப்படைப்புடனும் பொருத்துவதற்கான சிறிதளவு எழுத்துக் கலையுடனும் உங்களை அடையாளம் கண்டுபிடிக்கிறது.

தேர்ந்தெடுத்து வழங்குபவர்: எம்மா என்ஜி மற்றும் ஹேரா லின்ட்சே பேர்ட், உருப்படுத்திக் காட்டுபவர்: நியூசிலாந்திலுள்ள மிகவும் உற்சாகமூட்டும் இளம் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்களில் சிலர். புதிய உலகுகளையும், புவியீர்ப்பு வளைவுறும் காட்சிகளையும், நீங்கள் மறைந்த பிறகும் உங்களைப் பற்றி பேசும் உக்கிரமமான இதயத்துடிப்புகளையும் கண்டுபிடிக்கத் தயாராகுங்கள்.

தி மூட் மெஷின் நிகழ்ச்சியில் ஸுன் கவோ, வனெஸ்ஸா க்ரோஃப்ஸ்கீ, ரொப்பீ ஹேண்ட்காக், டிஅனா இட், கிரெகரி காந், ஷாரன் லாம், ஈமான் மர்ரா, எலிசபெத் பாயின்டன், ஸ்டேசி டியாக், சாம் தாமஸ், ல்டாயி திப்பி, செரினே திமோடியோ, ட்ஜேட் டவுன்சென், கிரிஸ் ட்சே மற்றும் ஹ்ஃபெய்த் வில்சன் ஆகியோரின் படைப்புகளைச் சித்தரிக்கிறது.

இடம்
Q Theatre
305 Queen St
Auckland CBD
நாள்
மார்ச் 5 – 24
Q தியேட்டர் திறந்திருக்கும் நேரங்களில் மட்டும்
டிக்கெட்
இலவசம்

நானம் X
தி கல்ட் புராஜெக்ட்
மே 25

விளக்கத்தை அளிக்கும் மார்க் கொனாகோவின் அசல் கலைவேலையுடன் சமையல் வல்லுநர்களான நானமின் ஜெஸ் க்ரனடா மற்றும் கல்ட் புராஜெக்ட்டின் கார்லோ புவேனவென்துரா ஆகியோர் செய்து காண்பிக்கும் ஃபிலிப்பைன் நாட்டவரின் ஒரு பாரம்பரியக் காலையுணவைத் தயாரிப்பதற்கு எங்கள் பாப்-அப் பிரேக்ஃபாஸ்ட் சீரீஸின் மூன்றாவது தவணை உங்களை அழைக்கிறது. சிக்வேட், பான் டி சியோசா மற்றும் கேப் அட் சினான்காக் ஆகிய உணவு வகைகளைச் செய்து காட்டுகின்ற அதேவேளை, ஒவ்வொரு கலைஞரும் கூறும் அந்தரங்கக் கதைகளின் தொகுப்பே இந்த நிகழ்வின் முக்கிய பாகம் ஆகும், இது பரிமாறப்படுகின்ற அந்த உணவு வகைகளுடன் அவர்களுக்குள்ள சிறப்பு உறவைப் பகிர்ந்துகொள்ளும்.

இந்தக் காலையுணவு, சைவ உணவு முறையைச் சார்ந்தது அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

இடம்
Nanam
178 Hurstmere Rd
Takapuna
நாள்
மே 25 சனிக்கிழமை
காலை 9.30 – 11 மணி
டிக்கெட்
ஒருவருக்கு $25 அல்லது குடும்ப உறுப்பினருடன் வருபவருக்கு $35
Book Now

கோலிவுட் எக்ஸ்ட்ரா
மே 11

ஒரு போலியான கோலிவுட் திரைப்படப் படப்பிடிப்பை எட்டிப் பார்த்து, கற்பனையாக மாபெரும் வெற்றிப்படமாகத் தயாராகும் அத்திரைப்படத்தில் நீங்கள் நடிப்பதாக மூழ்கிக்கொள்ளுங்கள்: நடன அசைவொன்றைக் கற்றுக்கொள்ளுங்கள், மேடை நிகழ்ச்சியைப் பாருங்கள் அல்லது திறமையுள்ள எங்கள் உளவாளிகளில் ஒருவரால் எடுக்கப்பட்டு, கண்டுபிடிக்கப்படும் உங்கள் ஹெட்ஷாட்டைப் பெறுங்கள்.

உருவாக்கம்: விஷனரி டைரக்டர் அஹி கருணாஹரன், சமையல் விருந்து படைப்பவர்: சாம்ருத் அகுதோட்டா, விரிவான, மாயாஜாலக் கலைப்படைப்பு: பெபென் பானா, கோலிவுட் எக்ஸ்ட்ரா ஆனது தென்னிந்திய சினிமாவுக்கான ஒரு பரஸ்பர மரியாதையாகும். நிகழ்ச்சியில் பங்கெடுங்கள், நேரலை நிகழ்ச்சி அமர்வில் பங்கெடுங்கள், பார்வையாளரான உங்களை ஒரு நோக்காளராக, ஒரு மிகைப்படியாளராக இருக்குமாறு அல்லது முன்னுக்கு வந்து, முதன்மைக் கதாபாத்திரத்தை ஏற்குமாறு உங்களை அழைக்கிறோம். 


இடம்
Sandringham Reserve
Sandringham Road
Sandringham
நாள்
மே 4 சனிக்கிழமை
மதியம் 12 – மாலை 6 மணி
மழை நாள்
1 மே சனிக்கிழமை
மதியம் 12 – மாலை 6 மணி
டிக்கெட்
இலவசம்

தி கிரிஸ்டல் பால்
ஜீன்மாதம்

தி கிரிஸ்டல் பால் மூலம் கற்பனையில் வடிக்கப்பட்ட எதிர்காலத்தை உற்றுப்பாருங்கள், தனித்துவமான பெரிய அளவிலான நிறுவலான இதை உருவாக்கியவர்: அனுபவ ஆற்றல்மிக்க கலைஞர் லக்ஷ்மன் அனந்தநாயகம் மற்றும் ஒலி-ஒளிக் கலைஞர் சுரேன் உங்கா. எங்கள் எதிர்கால நகரின் கனவுகளுக்குத் தெளிவான வாழ்க்கை கொடுக்கப்பட்டுள்ளது, ஒரு குறுகிய தருணத்திற்கு, எங்கள் இளையோர் அவர்களது நம்பிக்கைகள், அவர்களது கவலைகள் மற்றும் அவர்களாகவே உருவாக்க அவர்கள் கற்பனை செய்யும் உயிர்கள் ஆகியவற்றை மரபுரிமையாகப் பெற எதிர்பார்க்கின்ற உலகைப் பார்ப்பீர்கள்.

இடம்
St George St
Papatoetoe
நாள்
ஜீன்மாதம்
டிக்கெட்
இலவசம்

ஸோ & தி K-பாப் கிட்ஸ்
அக்டோபர் 12-13

நியூசிலாந்திலுள்ள சிறியதொரு நகரத்தில், K-பாப் வண்ணங்களை ஸொ கனவு காண்கிறாள். ஒரு குழுவுக்கு நடனமாடுவதற்காக அவள் எதையும் செய்வாள், எனவே ஒரு நடன நிகழ்ச்சிக்கான ஆடிஷனில் கலந்துகொள்ளும் வாய்ப்பு வந்தபோது, அவள் அந்த வாய்ப்பைப் பற்றிக்கொள்கிறாள். ஆனால் அதற்குத் தேவையான விஷயம் அவளிடம் இருக்கிறதா?

ஸோ & தி K-பாப் கிட்ஸ் ஆனது கடின உழைப்பு மற்றும் உங்கள் கனவுகளில் நம்பிக்கை வைத்தல் ஆகியவை பற்றிய ஒரு மிக உற்சாகமான சாகசம், சர்வதேச நடன அமைப்பாளரான ரினா சே (AOA, காஸ்மிக் கேர்ள்ஸ், SF9 மற்றும் மான்ஸ்டா X) நடனம் அமைத்துள்ள மற்றவரைத் தொற்றிக்கொள்ளும் பண்புடைய K-பாப் நடனத்தைச் சித்தரிக்கிறது.

இந்த வசப்படுத்துகின்ற, பரஸ்பர நிகழ்ச்சி, 4+ வயதுள்ள குழந்தைகளுக்குப் பொருத்தமானது.

இடம்
Bruce Mason Theatre
The Promenade
Takapuna
When:
அக்டோபர் 12 சனிக்கிழமை
காலை 11 – மதியம் 12 மணி
மதியம் 1 – 2 மணி
மாலை 6 – 7 மணி
 
அக்டோபர் 13 ஞாயிற்றுக்கிழமை
காலை 11 – மதியம் 12 மணி
மதியம் 1 – 2 மணி
மாலை 4 – 5 மணி
டிக்கெட்
$10 – $15
Book Now

இன்டர்ன்ஷிப் புரோகிராம்

எதிர்காலக் கலை மேலாளர்களையும் தயாரிப்பாளர்களையும் உருவாக்குவதில் கவனம் செலுத்தி, 2019-2020 காலப்பகுதியில், இரண்டு கலை நிறுவனங்களில் தயாரிப்பு மற்றும் சந்தைப்படுத்தல் துறைகளில் முக்கிய திறன்களை உருவாக்கும் வாய்ப்பை, தொழில் நடத்திக்கொண்டிருக்கும் வளர்ந்துவரும் இரண்டு ஆசியர்களுக்கு சேட்டிலைட்ஸ் இன்டர்ன்ஷிப் புரோகிராம் வழங்கும்.

2019 ஜூலையில் இதற்கான விண்ணப்பங்களைக் கோரும் அறிவிப்பு வெளியாகும்.

பற்றி

சேட்டிலைட்ஸ் தொடரில் பொதுவான நிகழ்வுகள் உங்கள் பார்வைக்குத் தரப்படும், இது ஆக்லாந்தில் உள்ள மிகுந்த உற்சாகமான சமகாலத்தைச் சேர்ந்த ஆசியக் கலைஞர்களைக் குறிப்பாக வெளிச்சத்திற்குக் கொண்டு வருகிறது.

ஆக்லாந்து கவுன்சிலில் ஆதரவுடன் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது

டேட்டிலைட்ஸ் குழுவினர் ரொசபெல் டான் விவ் டியோ மைக்கேல் மெக்கேப் அலெக்ஸ் காண்டர்

2019ல் புதிதாக எங்களுடன் இணைந்து பயிற்சி பெறுபவர்கள் நஹியியோன் லீ பாலா முரளி ஷிங்கேட்.

View Satellites 2017

View Satellites 2018